/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுதல் பிணவறை கட்ட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
/
கூடுதல் பிணவறை கட்ட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
ADDED : மே 22, 2024 09:15 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பிணவறை உள்ளது. இங்கு, தேசிய நெடுஞ் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், சாலை விபத்துகளில் இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்படுகின்றன.
மேலும் கொலை, தற்கொலை சம்பவங்களில் இறந்தவர்கள் சடலங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய ரவுடிகள் கொலைசெய்யப்பட்டாலும், இம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த பிணவறைக்கு அதிகமான சடலங்கள் வருவதால், கூடுதல் பிணவறை கட்ட, அரசுக்கு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்தது.
அதன்பின், கூடுதல் பிணவறை கட்ட 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த மார்ச் மாதம் அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக, பொதுப் பணித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

