/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் பராமரிப்பு பணிக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு
/
குடிநீர் பராமரிப்பு பணிக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு
குடிநீர் பராமரிப்பு பணிக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு
குடிநீர் பராமரிப்பு பணிக்கு ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 23, 2024 09:19 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், குடிநீர் பகிர்மான குழாய், பிரதான குழாய் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளில் உள்ள வால்வுகள் பழுதுகள், உடைப்புகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறுகளில் உள்ள மின்விசை பம்புகள் மற்றும் சிறுமின் விசை பம்புகளில் ஏற்படும் பழுதுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாமண்டூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள், உறுஞ்சும் கிணறுகளில் மின் மோட்டார்கள் வாயிலாக, தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்படுகிறது. இங்கு, குடிநீரில் தினமும் திரவ நிலை குளோரின் கலக்கப்பட்டு, பிரதான தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.
அதேபோல், பழவேலி தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள இரண்டு தொட்டிகளிலும் குடிநீர் நிரப்பப்படுகிறது. இங்கும் குடிநீரில் தினமும் திரவ நிலை குளோரின் கலந்து, ரேடியோ மலை, பாசித்தெரு, தட்டான்மலை ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் வாயிலாக் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், 2024- - 25ம் நிதியாண்டில், மேற்சொன்ன இடங்களில் குடிநீர் பராமரிப்பு பணிகள் செய்ய, 51.60 லட்சம் ரூபாய் ஒதுக்கி, நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஒப்புதல் அளித்துள்ளது.