/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார்ஜ் போட்டபோது பயங்கரம் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்
/
சார்ஜ் போட்டபோது பயங்கரம் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்
சார்ஜ் போட்டபோது பயங்கரம் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்
சார்ஜ் போட்டபோது பயங்கரம் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்
ADDED : ஆக 20, 2024 09:05 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் புருஷோத்தமன், 28, என்பவர், நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு, தனது எலக்ட்ரிக் பைக் வாகனத்திற்கு, வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது, வாகனத்தில் இருந்து எதிர்பாராமல் புகை கிளம்பி, வாகனம் முழுதும் தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த சவுந்தராஜ், 38, என்பவரின், ஆக்டிவா பைக்கிலும் தீ பரவியது. உடனே, அங்கிருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து, பைக் மீது தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தனர்.
இதற்கிடையில், தகவல் அறிந்து சிறுசேரி தீயணைப்பு துறையினர் வந்தனர். எனினும், அதற்குள் மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில், இரண்டு பைக்குகளும் சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.