/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூதாட்டி கழுத்தறுத்து கொலை கல்பாக்கம் அருகில் கொடூரம்
/
மூதாட்டி கழுத்தறுத்து கொலை கல்பாக்கம் அருகில் கொடூரம்
மூதாட்டி கழுத்தறுத்து கொலை கல்பாக்கம் அருகில் கொடூரம்
மூதாட்டி கழுத்தறுத்து கொலை கல்பாக்கம் அருகில் கொடூரம்
ADDED : செப் 17, 2024 11:32 PM

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், 80. மகன்கள், மகள்கள் ஆகியோர் திருமணமாகி, வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.
கணவர் கண்ணன் அண்மையில் இறந்தார். தனியாக வசித்துவந்த கன்னியம்மாள், வீட்டிலேயே இட்லி வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு, கன்னியம்மாள் கொலையாகி கிடந்தார். அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர், மூதாட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை கண்டு, சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் சென்று விசாரித்த போது, கன்னியம்மாள் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரிந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
மோப்ப நாய் மயானம் வரை ஓடிச்சென்று நின்றது. போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி., ரவி அபிராம் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் கூறும்போது, ”நேற்று முன்தினம் மாலை, கொலை நடந்திருக்கலாம். இரவு தான் தெரியவந்தது. துப்பு துலக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது,” என்றார்.