/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவி சமைக்காததால் ஆத்திரம்; மாமியாரை வெட்டிய மருமகன் கைது
/
மனைவி சமைக்காததால் ஆத்திரம்; மாமியாரை வெட்டிய மருமகன் கைது
மனைவி சமைக்காததால் ஆத்திரம்; மாமியாரை வெட்டிய மருமகன் கைது
மனைவி சமைக்காததால் ஆத்திரம்; மாமியாரை வெட்டிய மருமகன் கைது
ADDED : மே 05, 2024 11:56 PM
அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார், 35. இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் நாகவேடு கிராமத்தை சேர்ந்த ரேவதி, 29 என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
ரேவதி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றுவிடுவதால் மதன்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதன்குமார் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். பசியில் இருந்தவர் மனைவி ரேவதி சமையல் செய்யாமல் அவரது தாய் வீட்டுக்கு சென்றிருந்ததால் ஆத்திரமடைந்தார்.
இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகளுக்கு ஆதரவாக மாமியார் சுசீலா ,58 பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுசிலாவின் கழுத்தில் வெட்டினார். தடுக்க வந்த ரேவதியின் தங்கை ரோஜா மற்றும் உறவினர் பிரகாஷ் ஆகியோரை கத்தியால் குத்தினார்.
மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மதன்குமாரை பிடித்து அங்குள்ள மின் கம்பத்தில் கட்டினர். காயமடைந்தை மூவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அரக்கோணம் தாலுகா போலீசார், மதன்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.