/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அஞ்சூரம்மன் கோவில் குளம் ஆகாயத்தாமரை படர்ந்து பாழ்
/
அஞ்சூரம்மன் கோவில் குளம் ஆகாயத்தாமரை படர்ந்து பாழ்
அஞ்சூரம்மன் கோவில் குளம் ஆகாயத்தாமரை படர்ந்து பாழ்
அஞ்சூரம்மன் கோவில் குளம் ஆகாயத்தாமரை படர்ந்து பாழ்
ADDED : ஆக 07, 2024 02:24 AM

மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சிக்குஉட்பட்ட சமுதாயக்கூடம் அருகே உள்ள அஞ்சூரம்மன் கோவில் குளம் முழுதும், ஆகாய தாமரைமற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் கோவில் குளத்தில், தண்ணீர் இருப்பதே தெரியாத வகையில் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால், கொசு உற்பத்தியும்அதிகமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி உள்ளதாக, மக்கள் வேதனைதெரிவிக்கின்றனர்.
நீர் ஆதாரத்தை காக்கும்பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும். குளத்திற்கு நீர் வரும் வரத்து கால்வாய்களைசீரமைக்க வேண்டும். குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, குளத்தின் உள் பகுதியில் உள்ள கழிவு மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற, துறை சார்ந்த ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.