/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொல்லியல் துறை ஊழியர்கள் துாய்மை சேவை உறுதிமொழி
/
தொல்லியல் துறை ஊழியர்கள் துாய்மை சேவை உறுதிமொழி
ADDED : செப் 17, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில், தொல்லியல் துறையினர் ஸ்வச்சதா நிகழ்வுகளை கடைப்பிடித்து, சுற்றுப்புற துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று, கடற்கரை கோவில் பகுதியில், தொல்லியல் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் தலைமையில், அத்துறை ஊழியர்கள், சிற்ப வளாக பகுதி பாதுகாவலர்கள், ரோட்டரி சங்கத்தினர், துாய்மை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாட்டிற்கு துாய்மை பணியில் சேவையாற்றுதல், துாய்மை சேவைக்காக, வாரத்தில் இரண்டு மணி நேரம் வீதம், ஆண்டிற்கு 100 மணி நேரம் தன்னார்வத்துடன் ஒதுக்குவது உள்ளிட்ட உறுதிமொழிகளை, அப்போது அவர்கள் ஏற்றனர்.