/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் ஏலம்
/
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் ஏலம்
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் ஏலம்
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றிய வாகனங்கள் ஏலம்
ADDED : ஆக 11, 2024 02:21 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 85 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில், 40.36 லட்சம் ரூபாய் கிடைத்தது.
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட நான்கு ஆறு சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 64 இருசக்கர வாகனங்களை ஏலம் விட, காவல் துறையினர் முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு ஐ.டி.ஐ., வளாகத்தில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், ஏ.டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில், நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன.
இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வாகனங்ளை ஏலத்தில் எடுத்தனர். அதன்படி, 85 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில், 40.37 லட்சம் ரூபாய் கிடைத்தது. இதனை, அரசு கணக்கில் செலுத்தியதாக, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.