/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
448 பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தம்
/
448 பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தம்
ADDED : ஜூன் 01, 2024 06:06 AM

சென்னை : மாநகர பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை முழுமையாக தடுக்கும் வகையில், கதவுகள் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளை அடையாளம் கண்டு, தானியங்கி கதவுகளை பொருத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
அதன்படி இதுவரை, 448 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதாக, நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவு:
மொத்தம் 448 மாநகர பேருந்துகளில் கதவுகள் இல்லை என கண்டறியப்பட்டது. பயணியர் பாதுகாப்பு கருதி, முதல்கட்டமாக 200 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டமாக 248 பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.