/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரத்த சோகையை தடுக்க திருப்போரூரில் விழிப்புணர்வு
/
ரத்த சோகையை தடுக்க திருப்போரூரில் விழிப்புணர்வு
ADDED : செப் 04, 2024 01:33 AM
திருப்போரூர்:-மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில், இம்மாதம் முழுதும் 'போஷன் மா' என்கிற பெயரில், தேசிய ஊட்டச்சத்து விழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, திருப்போரூர் அடுத்த வெங்கலேரி கிராமத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், ரத்தசோகை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில், ரத்தசோகையின் அறிகுறிகள் மற்றும் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவு, குறைவாக இருந்தால் ஏற்படும் விளைவுகள், அதனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், ரத்தசோகையை தடுப்போம், ஆரோக்கியத்தோடு இருப்போம் என, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், அப்பகுதி வார்டு கவுன்சிலர் சாவித்திரி ஏழுமலை, அங்கன்வாடி பணியாளர் வசந்தி மற்றும் அப்பகுதிவாசிகள் பங்கேற்றனர்.