/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக்குகள் மோதல் தனியார் நிறுவன ஊழியர் பலி
/
பைக்குகள் மோதல் தனியார் நிறுவன ஊழியர் பலி
ADDED : ஜூலை 31, 2024 11:30 PM
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த புங்கேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான், 44. இவர், தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, புங்கேரி அரசு தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த பைக், நாகூரான் சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், நாகூரானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ரத்தினமங்கலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, நாகூரானைபரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக, எதிரே பைக்கில் வந்த, மடையத்துாரைச் சேர்ந்த எபிநேசர், 23, என்பவர் மீது வழக்கு பதிவு செய்த காயார் போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.