/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழிக்கு பழி... காதுக்கு காது தி.மு.க., நிர்வாகி காதை கடித்த ஆட்டோ டிரைவர் காது அறுப்பு....

ADDED : ஏப் 16, 2024 06:31 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன், 60. தி.மு.க., கிளைச் செயலரான இவரது மனைவி தேவி, தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 5ம் தேதி 'பிளாவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம், 42 என்பவருக்கும் தயாளனுக்கும் சாலை அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம் தயாளனின் இடது காதை கடித்து துண்டாக்கினார். தயாளன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் 26ம் தேதி மகாலிங்கம் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தயாளனின் மகன்கள் மற்றும் உறவினர்கள் மகாலிங்கம் வீட்டை அடித்து சேதப்படுத்தினர்.
தொடர்ந்து மகாலிங்கம் தலையில் வெட்டியும், வலது காதை கத்தியால் அறுத்தும் துண்டித்தனர். தடுக்க வந்த மகாலிங்கம் மனைவி அம்மு, தந்தை மாரி, உறவினர் பாபு ஆகியோரையும் சரமாரியாக தாக்கினர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகாலிங்கம் தலையில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தயாளன் மகன்கள், உறவினர்களை தேடி வருகின்றனர்.