ADDED : ஜூலை 04, 2024 12:28 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே சிட்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தர்ஷன், 11. அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 30ம் தேதி, மாலை 5 மணிக்கு, அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது, நிலத்தில் இருந்த பாம்பு, சிறுவனின் இடது காலில் கடித்துள்ளது. உடனே சிறுவனை மீட்ட அவரது பெற்றோர்,பெரிய கயப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அன்று இரவு, சிறுவனுக்கு மார்பு வலி ஏற்பட்டுள்ளது. உடனே, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.