/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஆக 22, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்,:திருப்போரூர் அடுத்த கொளத்துார் கிராமத்தில், செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்தன.
இதன் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. இதற்காக, கடந்த 19ம் தேதி முதல் கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.
நேற்று நான்காம் கால பூஜையும், 9:30 மணிக்கு கலச புறப்பாடும், 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சுற்றவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.