/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுபான கடைகளில் ஆய்வு செய்ய தாசில்தார்களுக்கு கலெக்டர் உத்தரவு
/
மதுபான கடைகளில் ஆய்வு செய்ய தாசில்தார்களுக்கு கலெக்டர் உத்தரவு
மதுபான கடைகளில் ஆய்வு செய்ய தாசில்தார்களுக்கு கலெக்டர் உத்தரவு
மதுபான கடைகளில் ஆய்வு செய்ய தாசில்தார்களுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 16, 2024 10:28 PM
செங்கல்பட்டு:கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தால், கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாசில்தார்களுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இங்கு, டாஸ்மாக் கடை, தனியார் 'குடி' மையம் மற்றும் தனியார் ஹோட்டல் மற்றும் கடைகளில், கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வோர் மீது நடவடிகைக்கை எடுப்பதுடன், விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடை, தனியார் குடி' மையம் மற்றும் கள்ளத்தனமாக விற்பனை செய்யும் இடங்களை ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எட்டு தாலுகா தாசில்தார்களுக்கும், சில தினங்களுக்கு முன், கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.