sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்

/

செங்கையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்

செங்கையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்

செங்கையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்


ADDED : ஏப் 10, 2024 11:16 PM

Google News

ADDED : ஏப் 10, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கியது.

ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 1,932 ஓட்டுச்சாவடிகள் தேர்தலன்று செயல்பட உள்ளன. இதில், 2,319 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன. இந்த மின்னணு இயந்திரங்களுக்கான சுழற்சி முறை தேர்வு சமீபத்தில் நடந்தது.

எந்தெந்த ஓட்டுச்சாவடிக்கு எந்தெந்த இயந்திரங்கள் செல்ல போகின்றன என்ற தேர்வு முறை முடிந்துள்ள நிலையில், சின்னத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நேற்று துவங்கியது.

சின்னம், பெயர், வேட்பாளரின் புகைப்படம் போன்ற விபரங்கள் அச்சடிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுகள், பெல் நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் ஓட்டுச்சீட்டுகளை இயந்திரத்தில் தேர்தல் அதிகாரிகள் பொருத்தினர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியும், காஞ்சிபுரம் கலெக்டருமான கலைச்செல்வி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சின்னம் பொருத்தும் பணியை ஆய்வு செய்தார்.

திருப்போரூர்


திருப்போரூர் சட்டசபை தொகுதியில் 318 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், 383 ஓட்டுப்பதிவு இயந்திரம், 383 கட்டுப்பாட்டு கருவி, 414 வி.வி.பேட் கருவிகள் உள்ளிட்டவை பாதுகாப்பு அறையில், போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களின் கட்சி மற்றும் சுயேச்சை சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.

திருப்போரூர் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலாயுதம் தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் அதிகாரிகள் பணியை மேற்கொண்டனர்.

செய்யூர்


செய்யூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 263 ஓட்டுச்சாவடிகளில், 315 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்த நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, காலை 10:00 மணிக்கு துவங்கியது.

அதன்பின், சின்னங்கள் பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சோதனை ஓட்டுப்பதிவு மேற்கொள்ளப்பட்டது.

- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us