/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டு மிஷினில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு
/
ஓட்டு மிஷினில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 12, 2024 10:03 PM
செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 31 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா, இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் தலா ஒன்று என, நான்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதன்பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான சுழற்சி முறை தேர்வு நடைபெற்றது.
சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, எந்தெந்த இயந்திரங்கள் என்பது குறித்து தேர்வுமுறை முடிந்தது.
சின்னத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி, கடந்த 11ம் தேதி துவங்கியது.
இதில், மதுரவாயல் சட்டசபை தொகுதிக்கு 1,056, அம்பத்துார் சட்டசபை தொகுதி - 840, ஆலந்துார் சட்டசபை தொகுதி - 962, ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதி - 902.
பல்லாவரம் சட்டசபை தொகுதி - 1,048, தாம்பரம் சட்டசபை தொகுதி - 1,024 என, மொத்தம் 5,832 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், சின்னத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டு பொருத்தம் பணி, நேற்று நிறைவடைந்தது என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

