/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கத்தில் மின்வெட்டு போராட்டம் நடத்த முடிவு
/
கல்பாக்கத்தில் மின்வெட்டு போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 05, 2024 08:34 PM
புதுப்பட்டினம்:அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியம் அருகில், புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிப்பகுதிகள் உள்ளன.
இரண்டு பகுதிகளும், அணுசக்தி துறையினருக்குமுக்கிய வர்த்தகசந்தையாக உள்ளது. அணுசக்தி துறையினர், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட தேவைகளுக்கு இங்குவருகின்றனர்.
இப்பகுதிகளில் தடையற்ற மின்சார வினியோகம் அவசியம். ஆனால், பகல், இரவு என, நேரபாகுபாடின்றி,அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து, புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவர் கூறியதாவது:
சில நாட்களாக, பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை துண்டிக்கப்படும் போதும், சில மணி நேரம் தாமதத்திற்கு பிறகே, மீண்டும் மின்சாரம் வினியோகம் கிடைக்கிறது.
அதனால், பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். அனைத்திற்கும் மின்சாரம்அவசியமானகாலத்தில், இப்படியொரு அவலமும் உள்ளது.
தொழில்களும், வியாபாரமும் முடங்குகின்றன. மாலையில் வியாபாரம் கேள்விக்குறியாகிறது.
வீடுகளில், புழுக்கத்தில் தவிக்கின்றனர் அவ்வப்போது,இரவில் இருளில் திருட்டு சம்பவங் களும் நடக்கின்றன.
கல்பாக்கத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்கிறது. அதை ஒட்டியே உள்ளஎங்களுக்கு,மின்சாரம் இல்லை.
மின்வெட்டை தவிர்க்காவிட்டால், விரைவில் முற்றுகை போராட்டம்நடத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.