/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்று தரைப்பாலம் முழுதும் இடிப்பு கட்டுமான பணிக்கு பாதை உருவாக்கம்
/
பாலாற்று தரைப்பாலம் முழுதும் இடிப்பு கட்டுமான பணிக்கு பாதை உருவாக்கம்
பாலாற்று தரைப்பாலம் முழுதும் இடிப்பு கட்டுமான பணிக்கு பாதை உருவாக்கம்
பாலாற்று தரைப்பாலம் முழுதும் இடிப்பு கட்டுமான பணிக்கு பாதை உருவாக்கம்
ADDED : ஏப் 22, 2024 05:59 AM

நெரும்பூர் : இரும்புலிச்சேரி பாலாற்று தரைப்பாலம் முழுதுமாக இடிக்கப்பட்டது. புதிய பால கட்டுமானப் பணிக்கான கனரக வாகன போக்குவரத்திற்கு ஏற்ப, தற்காலிக பாதையும் ஏற்படுத்தப்பட்டது.
திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பாலாற்றில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம், நாளடைவில் பலமிழந்தது. 2015 வெள்ளப்பெருக்கில் இடிந்தது.
தற்காலிக தரைப்பாலம் அமைத்து, வாகனங்கள் சென்று வந்தன. இப்பாலமும் கடந்த டிச., வெள்ளத்தில் சீரழிந்து, எடையாத்துார் வழியே, 5 கி.மீ., சுற்றி சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்டம் சார்பில், 51.87 கோடி ரூபாய் மதிப்பில், 644 மீ., நீளம், 7.5 மீ., அகலத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட உள்ளது.
கட்டுமானப் பணிகளை துவக்க, கடந்த பிப்., 28ம் தேதி பூமி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம், கடந்த ஒரு மாதமாக பழைய பாலத்தை, இயந்திரம் வாயிலாக படிப்படியாக இடித்தது.
அதன் கற்குவியலை அருகில் நிரப்பி, புதிய பாலம் கட்டுமானப் பணிக்கு செல்லும் கனரக வாகனங்கள் கடக்க, தற்காலிக தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கான்கிரீட் கலவை தயாரிக்கும் பிளாட் விரைவில் ஏற்படுத்தி, துாண்கள் கட்டுமானம் துவக்கப்படவுள்ளதாக, ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

