/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாலுகாவிற்கு ஒரு அறுவடை இயந்திரம் வழங்க வேளாண் பொறியியல் துறை அரசுக்கு பரிந்துரை
/
தாலுகாவிற்கு ஒரு அறுவடை இயந்திரம் வழங்க வேளாண் பொறியியல் துறை அரசுக்கு பரிந்துரை
தாலுகாவிற்கு ஒரு அறுவடை இயந்திரம் வழங்க வேளாண் பொறியியல் துறை அரசுக்கு பரிந்துரை
தாலுகாவிற்கு ஒரு அறுவடை இயந்திரம் வழங்க வேளாண் பொறியியல் துறை அரசுக்கு பரிந்துரை
ADDED : ஆக 27, 2024 01:10 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், 1.85 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இதில், மதுரந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. பாலாற்றங்கரை பகுதிகளில், ஆழ்துளை கிணறுகள் வாயிலாகவும், மற்ற பகுதிகளில் ஏரி, கிணறுகள் வாயிலாகவும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆழ்துளை கிணறு, கிணற்று நீர், ஏரிகள் வாயிலாக சம்பா, நவரை, சொர்ணவாரி பருவங்களில், நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
வேளாண்மை பொறியியல் துறை சார்பில், விவசாயிகள் நெல் அறுவடை செய்ய, பெரிய இயந்திங்கள் இரண்டு, பெல்ட் இயந்திரம் ஒன்று என, மூன்று அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
பெரிய இயந்திரத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு 1,160 ரூபாயும், பெல்ட் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 1,870 ரூபாயும் வாடகை வசூலிக்கப்படுகிறது. பெரிய நெல் அறுவடை இயந்திரங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டன.
இந்த இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன. மழைக்காலங்களில், பெல்ட் இயந்திரங்கள் பயன்படுத்தி நெல் அறுவடை செய்யப்படுகிறது.
இந்த இயந்திரமும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
வேளாண்மை பொறியில் துறை அறுவடை இயந்திரங்கள் பழுதடைந்தால், தனியார் நிறுவன அறுவடை இயந்திரங்களை, விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
தனியார் நிறுவன பெரிய இயந்திரங்களுக்கு 2,500 ரூபாயும், பெல்ட் இயந்திரங்களுக்கு 3,500 ரூபாயும் வாடகை பெறுகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.
மாவட்டத்தில், எட்டு தாலுகாவிற்கும், தலா ஒரு பெரிய அறுவடை இயந்திரம், பெல்ட் இயந்திரம் ஆகியவை ஒதுக்கீடு செய்ய, வேளாண்மை பொறியில் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்பின், மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில், நெல் அறுவடை இயந்திரங்கள் வாங்க, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அறுவடை இயந்திரங்கள் தேவை என, வேளாண்மை பொறியியல் துறையினர், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
அறுவடை காலங்களில் கூடுதல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு விட, பொறியியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அறுவடை இயந்திரங்கள் தேவை என, விவசாயிகள் பதிவு செய்தவுடன், இயந்திரங்கள் பெற்றுத்தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விவசாயிகள் சங்க நிர்வாகிகள்,
செங்கல்பட்டு.
அறுவடை இயந்திரங்கள் புதிதாக வாங்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அறுவடை அதிகமாக நடைபெறும் நேரங்களில், கூடுதல் அறுவடை இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.