/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகர் பேருந்து நிலைய பணி மந்தகதியில் நடப்பதால் அதிருப்தி
/
புறநகர் பேருந்து நிலைய பணி மந்தகதியில் நடப்பதால் அதிருப்தி
புறநகர் பேருந்து நிலைய பணி மந்தகதியில் நடப்பதால் அதிருப்தி
புறநகர் பேருந்து நிலைய பணி மந்தகதியில் நடப்பதால் அதிருப்தி
ADDED : மே 19, 2024 01:36 AM

செங்கல்பட்டு,:மலையடிவேண்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலைய பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. பணியை விரைந்து முடிக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், புதிய பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம், மின் வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராட்டிணங்கிணறு வரை, தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை, நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என, அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைக்க, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
கட்டுமான பணிகளுக்காக, 97 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு, கடந்த நவ., 15ம் தேதி காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தற்போது, புறநகர் பேருந்து நிலைய பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

