/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் இறைச்சி கழிவுகள் துர்நாற்றத்தால் நெ.குன்றத்தில் அவதி
/
சாலையில் இறைச்சி கழிவுகள் துர்நாற்றத்தால் நெ.குன்றத்தில் அவதி
சாலையில் இறைச்சி கழிவுகள் துர்நாற்றத்தால் நெ.குன்றத்தில் அவதி
சாலையில் இறைச்சி கழிவுகள் துர்நாற்றத்தால் நெ.குன்றத்தில் அவதி
ADDED : ஜூலை 05, 2024 12:36 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட ஜெயராமன் நகர் பகுதியில் உள்ள சாலையில், இரவு நேரத்தில் கோழி இறைச்சி மற்றும் மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
அவ்வாறு கொட்டிய இறைச்சி கழிவுகள், ஊராட்சி சார்பாக முறையாக அகற்றப்படாததால், நீண்ட நாட்களாக தேக்கமடைந்துள்ளன.
மேலும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், சாலையை கடந்து செல்லும் அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை கடந்து, அருகில் உள்ள கல்லுாரி மற்றும் பள்ளிக்கு மாணவ - மாணவியரும் சென்று வருகின்றனர்.
இது குறித்து, நான்காவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நாகராஜன்கூறியதாவது:
நெடுங்குன்றம் ஊராட்சி, நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதி களில், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் தேக்கமடைந்து உள்ளன.
அவற்றை அகற்றக்கோரி, ஊராட்சி தலைவருக்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை குப்பையை முறையாக அகற்ற, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளேன்.
எனவே, குப்பையை உடனுக்குடன் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.