/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் வரும் 29ல் தியான்சந்த் நினைவு போட்டி
/
செங்கல்பட்டில் வரும் 29ல் தியான்சந்த் நினைவு போட்டி
செங்கல்பட்டில் வரும் 29ல் தியான்சந்த் நினைவு போட்டி
செங்கல்பட்டில் வரும் 29ல் தியான்சந்த் நினைவு போட்டி
ADDED : ஆக 27, 2024 01:05 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான்சந்தின் பிறந்த நாளையொட்டி, நாளை மறுதினம் விளையாட்டு போட்டி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை
இந்தியாவின் விளையாட்டு பாரம்பரியத்தை நினைவுகூரும்வகையில், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான்சந்தின் பிறந்தநாளான ஆக., 29ம் தேதியை, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு, ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான்சந்தின் பிறந்த நாளான நாளை மறுதினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், தங்களின் ஆதார் அட்டையை சமர்ப்பித்து பங்கேற்கலாம்.
செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில், காலை 6:00 மணிக்கு மினிமாரத்தான் போட்டியும், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில், காலை 8:00 மணிக்கு கைப்பந்து போட்டியும் நடக்கிறது.
செங்கல்பட்டு அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் கூடைப்பந்து போட்டியும் நடக்கிறது. இதில், இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, 74017 03461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

