/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மயங்கி விழுந்து முதியவர் மரணம்
/
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மயங்கி விழுந்து முதியவர் மரணம்
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மயங்கி விழுந்து முதியவர் மரணம்
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மயங்கி விழுந்து முதியவர் மரணம்
ADDED : ஆக 09, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில். 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவரை, பேருந்து நிலைய காவலாளி மீட்டு, ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து போனது தெரிந்தது.
தொடர்ந்து, கிளாம்பாக்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, விசாரிக்கின்றனர்.