/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வழுக்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு
/
வழுக்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறப்பு
ADDED : மார் 06, 2025 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மனைவி சோலையம்மாள், 80. கடந்த 5ம் தேதி, வீட்டு வாசலில் வழுக்கி விழுந்து காயமடைந்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசில், அவரது மகள் பொன்னி புகார் அளித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.