/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி சரவம்பாக்கத்தில் தேர்தல் புறக்கணிப்பு
/
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி சரவம்பாக்கத்தில் தேர்தல் புறக்கணிப்பு
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி சரவம்பாக்கத்தில் தேர்தல் புறக்கணிப்பு
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி சரவம்பாக்கத்தில் தேர்தல் புறக்கணிப்பு
ADDED : மார் 29, 2024 09:11 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகேசரவம்பாக்கம் கிராமத்தில், 1,000த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமே கிராம மக்களின் பிரதான தொழிலாகும்.
குடியிருப்பு பகுதிக்கு அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன், புதிய கல் குவாரி துவங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துவங்கப்பட உள்ள குவாரிக்கு, அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள், அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், கல் குவாரி துவங்கப்பட்டு, செயல்பட்டு வரும் நிலையில், கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, சரவம்பாக்கம் கிராம மக்கள் லோக் சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
சரவம்பாக்கம் பகுதியில் செயல்படும் கல் குவாரியை மூட வேண்டும் என, பல அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோம். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கல் குவாரி தொடர்ந்து செயல்பட்டால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும். மேலும், பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிகளால், விவசாயக் கிணறுகள் மற்றும் வீடுகள் சேதமடைகின்றன.
இதனால், கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, கிராம மக்கள் அனைவரும் ஒரே கருத்தாக, லோக்சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.

