/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடலுார் சாலை வளைவில் மின் கம்பத்தால் இடையூறு
/
கூடலுார் சாலை வளைவில் மின் கம்பத்தால் இடையூறு
ADDED : செப் 07, 2024 07:27 AM
மறைமலை நகர் : மறைமலை நகர் - கலிவந்தப்பட்டு சாலையில், மறைமலை நகர் மின் வாரியம் வாயிலாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, கூடலுார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு, மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
கூடலுார் தண்ணீர் தொட்டி அருகில், சாலை வளைவில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாலை வளைவில் மின் கம்பம் உள்ளதால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள், வேகமாக வந்து திரும்பும் போது, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.