/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
/
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
ADDED : ஆக 20, 2024 10:32 PM

மறைமலை நகர்:மின் வாராயத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பின் சார்பில், நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு, நிரந்தப்பணி வழங்க வேண்டும். அரசு உத்தரவுக்கு எதிராக நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் கோஷம் எழுப்பப்பட்டது.