/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெருவாரியாக குப்பை சேகரிக்க வலியுறுத்தல்
/
தெருவாரியாக குப்பை சேகரிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2024 06:24 AM
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ஊராட்சி சார்பில் குப்பை சேகரிக்க வருவதில்லை என, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது:
பள்ளிக்கூட தெரு, பெருமாட்டுநல்லுார் கூட்டு சாலை, தங்கப்பாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஊராட்சி சார்பாக குப்பை சேகரிக்க வருவோர், தினசரி வருவதில்லை.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே, ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், தெருவாரியாக துாய்மை பணியாளர்கள் சென்று, குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.