/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
70 ஆயிரம் டன் சொர்ணவாரி நெல் செங்கையில் கொள்முதல் எதிர்பார்ப்பு
/
70 ஆயிரம் டன் சொர்ணவாரி நெல் செங்கையில் கொள்முதல் எதிர்பார்ப்பு
70 ஆயிரம் டன் சொர்ணவாரி நெல் செங்கையில் கொள்முதல் எதிர்பார்ப்பு
70 ஆயிரம் டன் சொர்ணவாரி நெல் செங்கையில் கொள்முதல் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 29, 2024 01:32 AM

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், நடப்பு சொர்ணவாரி பருவத்தில், 70,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில், நேற்று முன்தினம் நேரடி கொள்முதல் நிலையத்தை துவக்கிவைத்து, அமைச்சர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடப்பு சொர்ணவாரி பருவத்தில், 12,703 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்க்கும், 70,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.
இப்பருவத்தில், 46 கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதலில், ஒன்பது நிலையங்கள் துவக்கப்பட்டு, 36 இடங்களில் படிப்படியாக துவக்கப்படும். மேலும் தேவை ஏற்பட்டால், பிற இடங்களிலும் துவக்கப்படும்.
ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லிற்கு, ஆதார விலையாக, 2,320 ரூபாயும், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக 130 ரூபாயும் என, 2,450 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு குவிண்டால் புதுரக நெல்லிற்கு, ஆதார விலையாக 2,302 ரூபாயும், அரசின் ஊக்கத்தொகையாக 103 ரூபாயும் என, 2,405 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், முன்பு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோதே, 86 கொள்முதல் நிலையங்கள் தான் இருந்தன. கடந்த பருவத்தில், 137 இடங்களில் துவக்கப்பட்டன.
விவசாயிகள் நீண்டதுாரம் சென்று சிரமப்படும் நிலை, இனிமேல் இல்லை. ஓரிடத்தில், 500 ஏக்கர் வரை பயிரிட்டால், அங்கேயே நிலையம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் அருண்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.