/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருவலம் வழியாக மதுராந்தகத்திற்கு டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
/
மருவலம் வழியாக மதுராந்தகத்திற்கு டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
மருவலம் வழியாக மதுராந்தகத்திற்கு டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
மருவலம் வழியாக மதுராந்தகத்திற்கு டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 04, 2024 12:14 AM
செய்யூர்:செய்யூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில், விளங்கனுார், சாமந்திபுரம், சின்ன வெண்மணி போன்ற, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
மேலும், மதுராந்தகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரி, வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வங்கிக்கு, தினசரி நுாற்றுக்கணக்கானோர் சென்றுவருகின்றனர்.
செய்யூரில் இருந்து சித்தாமூர் வழியாக, மதுராந்தகத்திற்கு இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சாமந்திபுரம், கொள்ளம் பாக்கம், மருவளம் உள்ளிட்ட கிராம மக்கள், பேருந்து வசதிக்காக, 4 கி.மீ., தொலைவில் உள்ள விளங்கனுார் அல்லதுகாட்டுதேவாத்துார் போன்ற பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
காலை மற்றும் மாலை வேளைகளில், பேருந்து வசதிக்காக, பள்ளி மாணவர்கள் நீண்ட துாரம் நடந்து செல்கின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, மதுராந்தகம் - செய்யூர் இடையேயான சாமந்திபுரம், மருவளம், ஜமீன் எண்டத்துார் வழியாக டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.