/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உ.வே.சாமிநாதய்யருக்கு நினைவகம் திருக்கழுக்குன்றத்தில் எதிர்பார்ப்பு
/
உ.வே.சாமிநாதய்யருக்கு நினைவகம் திருக்கழுக்குன்றத்தில் எதிர்பார்ப்பு
உ.வே.சாமிநாதய்யருக்கு நினைவகம் திருக்கழுக்குன்றத்தில் எதிர்பார்ப்பு
உ.வே.சாமிநாதய்யருக்கு நினைவகம் திருக்கழுக்குன்றத்தில் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 26, 2025 10:00 PM
திருக்கழுக்குன்றம்:தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த திருக்கழுக்குன்றத்தில், அவருக்கு நினைவகம் அமைக்க வேண்டுமென, தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரத்தைச் சேர்ந்தவர் உ.வே.சாமிநாதய்யர்.
கடந்த 1855 பிப்., 19ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், சூரியமூலையில் பிறந்தார். தமிழ் அறிஞரான அவர், அழியக்கூடிய நிலையில் இருந்த பழங்கால தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை கண்டறிந்தார்.
அந்த இலக்கியங்களை நுால்களாக பதிப்பித்தார்.
இந்த தமிழ்த்தொண்டு காரணமாக, 'தமிழ் தாத்தா' என கொண்டாடப்பட்டார்.
வாழ்வின் இறுதிக்காலத்தில் இவர், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வசித்தார்.
பின், அங்கு 1948 ஏப்., 28ம் தேதி இறந்தார். உத்தமதானபுரத்தில் அவர் வாழ்ந்த வீட்டை, அவரது நினைவிடமாக தமிழக அரசு அமைத்துள்ளது.
இதேபோல், அவர் மறைந்த இடமான திருக்கழுக்குன்றத்தில், அவருக்கு நினைவகம் அல்லது அவரது சிலை அமைக்க வேண்டுமென, தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவரது எள்ளுப்பேரனான, சென்னை, பம்மலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சாமிநாதய்யருக்கு சிலை நிறுவுவது குறித்து, முதல்வரின் தனிப்பிரிவிலும் முறையிட்டு உள்ளார்.
அதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, வேதகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலருக்கு, உதவி கமிஷனர் கடிதம் அளித்துள்ளார். எனவே, இந்த கோரிக்கை ஏற்று, சாமிநாதய்யருக்கு நினைவகம் அல்லது சிலை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்துள்ளது.

