/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கல் சரணாலயம் பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
/
வேடந்தாங்கல் சரணாலயம் பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
வேடந்தாங்கல் சரணாலயம் பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
வேடந்தாங்கல் சரணாலயம் பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 15, 2025 01:46 AM

மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே, உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்திற்கு தற்போது கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்துள்ளன.
30,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
தற்போது, சுற்றுலா பயணியர் வருகை கணிசமான அளவில் உள்ளது. மதுராந்தகம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, பேருந்து வசதி உள்ளது.
ஆனால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், பேருந்து பயணியர் நிழற்குடை இல்லை.
இதனால், பேருந்துக்கு காத்திருப்போர், அப்பகுதியில் உள்ள மரத்தடியில் கால்கடுக்க காத்து கிடந்து, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, வனத்துறை மற்றும் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.