/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலி பத்திரப்பதிவு சார் - பதிவாளர் உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
/
போலி பத்திரப்பதிவு சார் - பதிவாளர் உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
போலி பத்திரப்பதிவு சார் - பதிவாளர் உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
போலி பத்திரப்பதிவு சார் - பதிவாளர் உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 15, 2024 10:55 PM
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகில் கன்னிவாக்கம் கிராமத்தில், 'சென்சுரி லெதர்ஸ்' என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 25.91 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 20 ஏக்கர் நிலம் தொடர்பாக, பத்திர பிரச்னைகள் முடிந்துள்ளன. எஞ்சிய, 5.23 ஏக்கர் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை உறுதிப்படுத்துவது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த மே மாதம், இந்நிறுவனத்தின் பெயரில் இருந்து பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு, 5.23 ஏக்கர் நிலம், ஐந்து பத்திரங்களாக வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்சுரி லெதர்ஸ் நிறுவனம், திருப்போரூர் சார் - பதிவாளருக்கு புகார் அளித்தது.
இந்த மோசடி குறித்து, பதிவுத்துறை விசாரணை நடத்தியது. இதில், திருப்போரூர் சார் - பதிவாளர் கணேசன், தலைமை எழுத்தர் சக்திபிரகாஷ், ஜூனியர் உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்தது உறுதியானது.
பதிவுத்துறை ஐ.ஜி., ஆலிவர் பொன்ராஜ், திருப்போரூர் சார் - பதிவாளர் கணேசன் உட்பட மூன்று பேரையும் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.