/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளத்தில் கவிழ்ந்த கார் உயிர் தப்பிய குடும்பம்
/
பள்ளத்தில் கவிழ்ந்த கார் உயிர் தப்பிய குடும்பம்
ADDED : ஏப் 28, 2024 06:42 AM

அச்சிறுபாக்கம், : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 46, என்பவர், மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன், 'மாருதி சுசூகி' காரில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்தார்.
அப்போது, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்துார் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி, 10 அடி ஆழமுள்ள மழைநீர் செல்லும் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து விரைந்து சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், சிறிய காயங்களுடன் காரில் தவித்துக் கொண்டிருந்த கணவன் - மனைவி மற்றும் குழந்தையை மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

