/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லத்துார் ஏரியை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
/
லத்துார் ஏரியை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : செப் 03, 2024 04:57 AM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே லத்துார் கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியின் வாயிலாக, 200 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது.
விழுதமங்கலம், சாத்தமங்கலம், புணமை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் மதுராந்தகம் ஏரி மேல்மட்ட உபரிநீர் வாயிலாக, இந்த ஏரிக்கு தண்ணீர் வந்தடைகிறது.
லத்துார் ஏரியில் இருந்து மதகுகள் வாயிலாக வெளியேறும் நீர், விவசாய நிலங்களுக்கு செல்கிறது. ஏரி, பல ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படாததால், ஏரியில் போதிய நீரை தேக்க முடியாத சூழல் உள்ளது.
இதனால், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல், கோடை காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் லத்துார் ஏரி நீர்வரத்து மற்றும் உபரிநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.