/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு தாக்கல்
/
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு தாக்கல்
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு தாக்கல்
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு தாக்கல்
ADDED : ஜூன் 30, 2024 11:09 PM

செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் என, 31 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின கணக்குகளை, வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் செலவு கணக்குகள் இறுதி ஒத்திசைவு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர் சந்தோஷ் சரண் பங்கேற்றார்.
அதன்பின், 17 வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்தனர். தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், மாவட்ட தேர்தல் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, கலெக்டரின் கணக்குகள் நேர்முக உதவியாளர் நாகலிங்கம், தாசில்தார் சிவசங்கரன் மற்றும் உதவி தேர்தல் பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.