/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பசுமை சாம்பியன் விருது 3 பேர் பரிந்துரை
/
பசுமை சாம்பியன் விருது 3 பேர் பரிந்துரை
ADDED : மே 10, 2024 01:37 AM
செங்கல்பட்டு
தமிழக அரசின் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து, ஐந்து பேர் விண்ணப்பித்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பித்த ஐந்து பேரின் விண்ணப்பங்களை பரிசிலனை செய்து, அதில் மூன்று பேரின் விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டது.
அவர்களின் பெயர்களை, தமிழக அரசுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது.