/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலை மீடியனில் இரும்பு தடுப்பு அமையுமா?
/
ஜி.எஸ்.டி., சாலை மீடியனில் இரும்பு தடுப்பு அமையுமா?
ஜி.எஸ்.டி., சாலை மீடியனில் இரும்பு தடுப்பு அமையுமா?
ஜி.எஸ்.டி., சாலை மீடியனில் இரும்பு தடுப்பு அமையுமா?
ADDED : செப் 15, 2024 02:17 AM

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் 200க்கும் மேற்பட்ட கடைகள், வங்கிகள், மருத்துவமனைகள் உள்ளன.
சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் வந்து செல்கின்றனர். இந்த சாலையை கடந்து மாணவ -- மாணவியர் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பஜார் பகுதியான திருத்தேரி -- ஒரகடம் சாலை சந்திப்பு வரை, சாலை மீடியனில் பாதசாரிகள் கடக்க முடியாத படி, விபத்தை தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், அனுமந்தபுரம் சாலை சந்திப்பு அருகே, 100 அடி தூரம் வரை தடுப்பு கம்பிகள் இல்லாததால், இப்பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும்போது, அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த பகுதியில் இரும்பு தடுப்பு கம்பிகள் இல்லாததால், சாலையை கடக்கும் பாதசாரிகளும், குறிப்பாக பேருந்தை பிடிக்க செல்வோரும், இந்த வழியாக செல்லும் போது, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, 100 அடி தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.