/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி ஆர்.ஐ., அலுவலகம் இடிந்து விழும் நிலையில் அச்சுறுத்தல்
/
கூடுவாஞ்சேரி ஆர்.ஐ., அலுவலகம் இடிந்து விழும் நிலையில் அச்சுறுத்தல்
கூடுவாஞ்சேரி ஆர்.ஐ., அலுவலகம் இடிந்து விழும் நிலையில் அச்சுறுத்தல்
கூடுவாஞ்சேரி ஆர்.ஐ., அலுவலகம் இடிந்து விழும் நிலையில் அச்சுறுத்தல்
ADDED : மே 28, 2024 11:34 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளது.
இந்த வளாகத்தில், கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகமும், நந்திவரம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகமும் செயல்படுகின்றன.
இதில், வருவாய் ஆய்வா ளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, 20 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, பழைய கட்டடங்கள், ஆங்காங்கே விரிசல் அடைந்து, சிமென்ட் சிலாப்புகள் பெயர்ந்து, கதவு, ஜன்னல்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளன.
மேலும், இந்த அலுவலகத்திற்கு, வருமானம், சாதி, இருப்பிடம், முதியோர் உதவி தொகை, விதவை, பட்டா பெயர் மாற்றம்உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெற, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தோர், தினமும் வந்து செல்கின்றனர். எனவே, விரிசல் விழுந்து அபாய நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.