/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா கடத்திய சகோதரர்கள் கைது
/
குட்கா கடத்திய சகோதரர்கள் கைது
ADDED : மே 04, 2024 09:52 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள், மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, மண்ணுார் கூட்டுச்சாலை சந்திப்பில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி முட்டைகள் ஏற்றி வந்த மினி லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், முன்புறம் முட்டைகளை அடுக்கி, அதன் பின்னால் மூட்டை மூட்டையாக குட்கா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. விசாரணையில், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, மினி லோடு ஆட்டோவில் முட்டை விற்பனை செய்வது போல, குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து, ஆட்டோவில் வந்த திருவள்ளூர் பாப்பரம்பாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், 34, மற்றும் அவரது சகோதரர், சிவா, 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 44,000 ரூபாய் மதிப்பிலான 77 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.