/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகரில் குட்கா விற்பனை அமோகம் மூட்டைகளில் கிடக்கும் காலி கவர்கள்
/
புறநகரில் குட்கா விற்பனை அமோகம் மூட்டைகளில் கிடக்கும் காலி கவர்கள்
புறநகரில் குட்கா விற்பனை அமோகம் மூட்டைகளில் கிடக்கும் காலி கவர்கள்
புறநகரில் குட்கா விற்பனை அமோகம் மூட்டைகளில் கிடக்கும் காலி கவர்கள்
ADDED : ஆக 20, 2024 10:31 PM

மறைமலை நகர்:தமிழகம் முழுதும், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், செங்கை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல பெட்டிக் கடைகள், டீ கடைகள், மளிகை கடைகளில், கள்ளத்தனமாக புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வனப்பகுதியில், மூட்டை மூட்டைகளாக, ஹான்ஸ், கூல்-லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களின் காலி கவர்கள் கொட்டப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில் கொட்டப்பட்டு உள்ள குட்கா பொருள் குப்பையால், அப்பகுதிவாசிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மேலும், அனைத்து கவர்களும் புதிதாக உள்ளதால், இந்த பகுதியில் குட்கா தயாரிக்கும் நிறுவனம் ஏதேனும் செயல்பட்டு வருகிறதா என, அப்பகுதிவாசிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில், ஏற்கனவே இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது புகையிலை பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளது, அப்பகுதிவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

