/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு
/
ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு
ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு
ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு
ADDED : ஆக 29, 2024 01:34 AM

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் உட்கோட்டம், அச்சிறுபாக்கம் பிரிவுக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை, 300 கி.மீ., துாரம் உள்ளது. இதில், திருமுக்காடு - பெரும்பேர்கண்டிகை, தொழுப்பேடு - ஒரத்தி, ஒரத்தி - வடமணிப்பாக்கம், சிறுதாமூர் - சென்னேரி பகுதிகளுக்கு உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.
இதில், வெளியம்பாக்கம் - கொங்கரை மாம்பட்டு வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையும் உள்ளது. இந்த சாலை, 10 கி.மீ., துாரம் உள்ளது.
இந்த சாலையை, வெளியம்பாக்கம், கரசங்கால், நெடுங்கல், அல்லுார், முருங்கை உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில், 20க்கும் மேற்பட்ட சிறிய பாலங்கள் உள்ளன.
பல ஆண்டுகளாக, சாலை பகுதியில், நீர்வரத்து கால்வாய்கள் மீது அமைக்கப்பட்ட சிறு பாலங்கள், துார் வாரப்படாமல் இருந்தன. இதனால், மழைக் காலங்களில், மழைநீர் விரைந்து வெளியேற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.
தற்போது, வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுராந்தகம் உட்கோட்டம், அச்சிறுபாக்கம் பிரிவுக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையை கடந்து, ஏரிகளுக்கு நீர் வரத்து செல்லும் கால்வாயில் அமைக்கப்பட்ட சிறிய பாலங்களில், துார் வாரும் பணியை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.