/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பங்கேற்பு
/
மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பங்கேற்பு
ADDED : ஜூலை 11, 2024 12:46 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி முன்னிலை வகித்தார். வருவாய்மற்றும் பேரிடர்மேலாண்மை துறை,கூட்டுறவுத் துறை,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்உள்ளிட்ட துறையினர்பங்கேற்றனர்.
அதன்படி, 47 பயனாளிகளுக்கு கூட்டுறவுத் துறை வாயிலாககடன், தையல் இயந்திரம், வீட்டு மனை பட்டா, விவசாயிகளுக்குஈடு பொருள்கள்என, 86.15 லட்சம்ரூபாய் மதிப்பில்அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்வழங்கினார்.
தொடர்ந்து கிராமமக்களின் பல்வேறு கோரிக்கைகளைமனுவாக பெற்று, விரைவில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மேலும், கால்நடை பராமரிப்பு துறை,சுகாதாரத் துறைஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், வேளாண் பொறியியல் துறை ஆகிய வற்றின் சார்பில் செயல் படுத்தும் திட்டங்கள் குறித்து மக்கள்அறியும் வகையில், விளக்க கண்காட்சிஅரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
இதில், மாவட்டவருவாய் அலுவலர்சுபா நந்தினி, சார்ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தஅதிகாரிகள்உடனிருந்தனர்.