/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
/
திருப்போரூர் அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
திருப்போரூர் அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
திருப்போரூர் அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கம்
ADDED : ஜூன் 26, 2024 12:59 AM

திருப்போரூர், திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவியரின் இலக்கியஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த கல்வியாண்டிற்கான இலக்கிய மன்ற துவக்க விழா, நேற்று நடந்தது. இதில், பள்ளித் தலைமையாசிரியர் ஸ்ரீதேவி தலைமைவகித்தார்.
சிறப்பு விருந்தினராக பேச்சாளர், வழக்கறிஞர் முனீஸ்வரன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஆல்பிரட், ஆசிரியர்கள் உதயகுமார், ரூபி உள்ளிட் டோர், மன்ற செயல்பாடுகளின் நுட்பங்களை மாணவியருக்கு விளக்கினர்.
கட்டுரை, பேச்சு,நடனம் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் அமுதா நன்றி கூறினார்.