/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரம்ப சுகாதார நிலையம் முதலியார் குப்பத்தில் துவக்கம்
/
ஆரம்ப சுகாதார நிலையம் முதலியார் குப்பத்தில் துவக்கம்
ஆரம்ப சுகாதார நிலையம் முதலியார் குப்பத்தில் துவக்கம்
ஆரம்ப சுகாதார நிலையம் முதலியார் குப்பத்தில் துவக்கம்
ADDED : செப் 01, 2024 03:53 AM
செய்யூர் : செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, 35 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக ஓதியூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும், 2,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர்.
மேலும், கர்ப்பிணியருக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் ரத்த அழுத்தம் பரிசோதனை, சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன.
இங்கு பணிபுரிந்த செவிலியர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், கடந்த சில மாதங்களாக துணை சுகாதார நிலையம் செயல்படாமல் இருந்தது,
இதனால், இப்பகுதி வாசிகள் செய்யூர் மற்றும் கடப்பாக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதியவர்கள் மற்றும் கர்ப்பிணியர் சிரமப்படுகின்றனர் என, நம் நாளிதழில் வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக செவிலியர் நியமனம் செய்து, முதலியார்குப்பம் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.