/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்துார்- - சிறுதாவூர் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
/
ஆலத்துார்- - சிறுதாவூர் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
ஆலத்துார்- - சிறுதாவூர் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
ஆலத்துார்- - சிறுதாவூர் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2024 07:52 PM
திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., மற்றும் திருப்போரூர் - -திருக்குழுக்குன்றம் சாலையை இணைக்கும், ஆலத்துார் - -சிறுதாவூர் சாலை, 3 கி.மீ., துாரம் உள்ளது.
ஆலத்துார் சிட்கோ வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. சிறுதாவூரைச் சுற்றியுள்ள ஆமூர், முந்திரித்தோப்பு, மடையத்துார், மானாமதி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், ஆலத்துார் தொழிற்சாலைக்கு செல்ல மேற்கண்ட சாலையை பயன்படுத்துகின்றனர்.
இச்சாலை ஆங்காங்கே சேதமடைந்தும், குறுகியதாகவும் உள்ளது. அதனால், இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, ஆலத்துார் - -சிறுதாவூர் சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.