/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை வரதனார் தெருவில் சாலை அமைக்க வலியுறுத்தல்
/
செங்கை வரதனார் தெருவில் சாலை அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 22, 2024 12:14 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியின் மையப்பகுதியாக, வேதாசம் நகரில், வரதனார் தெரு அமைந்துள்ளது. இங்கு, வங்கிகள், தலைமை தபால் நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனை, வணிக வளாகங்கள், குடியிருப்புகள் உள்ளன.
இந்த தெரு வழியாக, தினமும் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இத்தெருவில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சாலை சீரமைக்கப்படாததால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
மழைக்காலத்தில், பள்ளங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
எனவே, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி, சாலை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.