/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறுகிய விழுதமங்கலம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
/
குறுகிய விழுதமங்கலம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
குறுகிய விழுதமங்கலம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
குறுகிய விழுதமங்கலம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2024 03:34 AM

செய்யூர், : செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் இருந்து, அரியனுார் வழியாக விழுதமங்கலம் செல்லும், 10 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது. இது, நாகமலை, நெசப்பாக்கம், வெண்மணி, கல்பட்டு உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலை.
தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் நுாற்றுக்கணக்கானோர், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில், ஏராள மான கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளுக்கு, அதிக அளவிலான லாரிகள் தினசரி வந்து செல்கின்றன.
தற்போது அமைக்கப் பட்டுள்ள தார்ச்சாலை,குறுகலாக 3.5 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொண்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
வளைவுப்பகுதிகளில் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளாகின்றன. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.