/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச தர வசதிகள் மாமல்லையில் ஏற்பாடு
/
சர்வதேச தர வசதிகள் மாமல்லையில் ஏற்பாடு
ADDED : செப் 09, 2024 06:39 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பாரம்பரிய சிற்ப வளாகங்களில், பயணியருக்கு அவசியமான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
சுத்திகரிப்பு குடிநீர், நவீன கழிப்பறை, கற்களில் இருக்கைகள், மின் விளக்குகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகளை, தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் ஏற்படுத்த, தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இத்தகைய வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக, அத்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஜான்விஜ் சர்மா, கடந்த ஆக., 28ம் தேதி, சிற்ப வளாகங்களில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நேற்று டைரக்டர் ஜெனரல் யதுபிர் சிங் ராவத், சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் ஆகியோருடன், சிற்ப வளாகங்களை பார்வையிட்டார்.
அப்போது, சிற்ப வளாகங்களில் பயணியர் குவிவதை பார்வையிட்ட அவர், சர்வதேச தரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, துறை அலுவலர்களுடன் ஆலோசித்தார்.